Tuesday, March 22, 2011

VIRTUAL TAMIL OPERATING SYSTEM- TRAIL VERSION RELEASE










VIRTUAL TAMIL OPERATING SYSTEM- TRAIL VERSION RELEASE



எந்த ஒரு தொழில்-நுட்பமும்,அறிவியல் வளர்ச்சியும்,கலைப்படைப்புகளும் அனைத்து தர மக்களையும் எளிதில் முழுமையாக சென்றடையும்போதுதான், அது உண்மையாகவே வெற்றி அடைகின்றன. இன்றைய உலகம்- கணிணி யுகம்.ஆம்.உலகின் எல்லா வகை செயல்பாடுகளிலும்,பல்வேறு துறைகளிலும் கணிணியை பயன்படுத்தி வருவது அதிகரித்து கொண்டே வருகிறது என்பது உண்மையே.ஆனால்,இந்த அதிவேக நவீன வளர்ச்சிகள் எல்லாம் மக்களை சென்றடைந்துள்ளதா? குறிப்பாக நம் தமிழ் மக்களை முழுமையாக சென்றடைந்துள்ளதா? எவ்வளவு?



உலகெங்கிலும் உள்ள 7 கோடி தமிழ் மக்களில், கணிணி'யை பயன்படுத்துவோர் எவ்வளவு பேர்?



பல கோடி(400) ரூபாய் செலவில் செம்மொழி மா-நாடு, செம்மொழி பூங்கா,தமிழில் பெயர் வைத்தால் திரைப்படத்திற்கு வரிவிலக்கு, தமிழ் வழி படித்தால் அரசு வேலையில் முன்னுரிமை- எதற்கு?




ஐ.நா தெரிவித்துள்ள அழியும் தருவாயிலுள்ள பல நூறு உலக மொழிகளின் பட்டியலில், இனி வரும் காலங்களில் நம் தமிழ் மொழியை மேலும் இடம்பெறாமல் பாதுகாப்பது- எப்படி?



உலகத்தமிழ் மா-நாடு, தமிழ் இணைய மா-நாடு ஆகியவற்றில் சமர்ப்பிக்கப்பட்ட பல நூறு ஆய்வுக்'கட்டுரைகளில் உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் முன்வைத்த கருத்துகள் என்ன?









இந்தியாவிலேயே தகவல்தொழில்-நுட்ப வளர்ச்சியில் இரண்டாவது மா-நிலமாக திகழும் நம் தமிழ்-நாட்டில், தமிழுக்கும், தமிழ்மொழி பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கும் கிடைத்துள்ள துறை'சார் (தகவல் தொழில்-நுட்பம்) தீர்வுகள் எவ்வளவு?




தமிழ் இணைய பல்கலைக்கழகம் சார்பாக தமிழ் மென்பொருள் வளர்ச்சி நிதி'யின் கீழ் இதுவரை எவ்வளவு லட்சங்கள் செலவிடப்பட்டுள்ளது? அதன் மூலம் தமிழ் வளர்ச்சிக்காக தமிழ் ஆர்வலர்கள் உருவாக்கி தந்த தமிழிற்கான மென்பொருள்கள் எல்லாம் எவ்வளவுதூரம் உண்மையிலேயே பயன்பாட்டிற்கு வந்துள்ளது?




தமிழ் இணையம் 2010, கோவை மா-நாட்டுக் கட்டுரைகளில் இடம்பெற்ற ஒரு சில கருத்துகள்:




"தமிழ் மென்பொருள் வளர்ச்சி நிதியின் கீழ் முடிந்த திட்டங்களில் சில:


பெயர்/திட்ட காலம்/அளிக்கபட்ட நிதி:



1.இதம் 2000 (விண்டோஸ் 2000)-5 ஆண்டு-10 இலட்சம்

2.தமிழில் விண்டோஸ் 95-98-5 ஆண்டு-5 இலட்சம்

3.'ழ' கணிணி தமிழில் லைனக்ஸ்-2 ஆண்டு-0.75 இலட்சம்

...இன்னும் பல...


கணிப்பொறிகளில் தமிழ்: மைக்ரோசாப்ட், லினக்ஸ் போன்ற செயலிகளை ஆங்கிலம் தெரியாதவர்களும், தமிழ் கொண்டே பயன்படுத்தும் பல மென்பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தோல்வி: மென்பொருள் உருவாக்கஸ் சிக்கல்கள்- ஏறக்குறைய எல்லா மென்பொருள் திட்டங்களும் கொடுத்த காலத் தவணைக்குள் முடிக்காமல் பல ஆண்டுகள் கழித்தே முடிக்கபட்டிருக்கின்றன.பல 10 ஆண்டுகள் ஆகியும் முடிக்கப்படாமல் பல்வேறு நிலைகளில் தேக்கமடைந்து உள்ளன.


இதற்கு மென்பொருள்களை உருவாக்கும் பொறியாளர்கள் இடப்பெயர்வும், குறைபாடுகளைப் புரிந்து கொண்டு களையும் திறமையில்லா புதியவர்களும், உருவாக்கப்படும் மென்பொருளுக்கு சந்தையில் வரவேற்பு-இன்மையும் காரணங்களாகும். முடிக்கப்பட்டு செயல்முறையில் ஒரு கணிப்பொறிகளில் காட்டப்படும் சில மென்பொருள்களும், வேறு சில கணிப்பொறிகளில் செயல்படுவதில்லை. இம்மென்பொருள்கள் கணிப்பொறி, காலம், மொழி என்ற வேறுபாடுக்ளால் செயல்படாமல் போய்விடுகின்றன. எனவே, உருவாக்கப்படும் பல மென்பொருள்கள் வெளிச்சத்திற்கு வராமல் முடங்கிக் கிடக்கின்றன."


----- முனைவர் ப.அர.நக்கீரன், இயக்கு-நர், தமிழ் இணையப் பல்கலைக்கழகம்




"கணிணி உலகில் நாளும் அறி-ஞர்கள் பெருக வாழும் மொழியாம் தமிழில் முழுமையாய் கணிணியறிவியல் அமைய வேண்டும்.செயல் செய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் சீறிவந்தே.என்னும் பாவேந்தர் பாரதிதாசன் கட்டளைக்கிணங்க நாம் கணிணியறிவியலிலும் தமிழ்ப்பயன்பாட்டை முழுமையாகக் கொண்டு வர வேண்டும். அதுவே நாம் செய்யும் எப்பணிக்கும் முதற்பணியாய் அமைய வேண்டும்."


-----இலக்குவனார் திருவள்ளுவன் மயிலாப்பூர், சென்னை 600014



"மொழி முதன்மை பெறாத இடத்தில் சிந்தனை செழித்து வளர்வதில்லை. ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில், தாய்மொழி வழிக் கல்வியினையும், அதனால் அவர்கள் பெற்று வருகின்ற உயர்வினையும், உலகமே இன்று கண்டு வியக்கின்றது.தாய்மொழியால் இயலாததை எம்மொழிகளாலும் சாதிக்க முடுயாது என்பதைப் பாரதி முதல், பல்வேறு அறி-ஞர்களும் கூறியும், ஆய்வுகள் நடத்தியும் நிருபித்துள்ளனர்."


------லா.சார்லஸ், எம்.ஏ.எம்.பில்., தமிழ் விரிவுரையாளர், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சி.




"தமிழ் கணிமை திட்டங்கள் என்றாலே ஒரு வித தயக்கம் இன்றைய கல்லூரி மாணவர்கள், ஏன் ஆசிரியர்களிடமும் இருக்கிறது என்பது கசப்பான உண்மை. இது இக்கால சூழ்-நிலை காரணமா (அ) படித்தவர்களிடம் தமிழ் பற்று குறைவா என ஆராய்வது ஒரு கோனம். அதை விடுத்து, அத்தகையவரிடம் நம்பிக்கை கொண்டு வர தமிழ் ஆர்வலர்கள் என்ன செய்ய வேண்டும் என ஆராய்வது இங்கு நோக்கமாகும்.பலர் தமிழ் கணிமை எதற்கு, இதனால் என்ன பலன் என்று தட்டி கழிக்க பார்க்கின்றனர். தமிழில் மென்பொருள்களை உருவாக்கும் தேவையை நிறைய பேர் உணர மறுக்கின்றனர்.மேலும், தமிழ் கணிமையில் திட்டம் செய்தால், பிறகு வேலை கிடைக்காது என்ற அவ-நம்பிக்கை இருக்கிறது...... எங்கள் கல்லூரி அனுபவத்தை, இது போல ஏனைய அனைத்து கல்லூரிகளும், முதலில் ஆசிரியர்களுக்கு பட்டறைகள் மூலம் கற்பித்து, எங்களைப் போல, மாதிரி திட்டங்களை எடுத்து செயல்படுத்தி மாணவர்களிடம் நம்பிக்கையை வரவழைக்க வேண்டும். மாணவர்கள் மிக பெரிய சக்தி. அது இலவசமாக கிடைக்கிறது. மேலும், மாணவர்களுக்கு தமிழின் பால் ஆர்வம் வந்து, செயல்பட்டார்களானால், நாட்டுக்கும் நன்மை பயக்கும். தமிழ் மென்பொருட்களால், தமிழ் தெரிந்த மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், அவர்கள் அதை தங்கள் வாழ்கை தரத்தை மேம்படுத்த செய்வர் என்பது திண்மை."



----- முனைவர் ஆ.முத்துக்குமார், பேராசிரியர், குமரகுரு பொறியியல் கல்லூரி, கோவை.




"மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்திற்காக மனிதன் கண்ட கருவியே. ஆனால் தாய்மொழியானது பிறந்த நாள் முதல் நமது செவியில் பட்டு மூளையில் தங்கிய உணர்வு நிலையும் கூட. மூளையின் செயல்பாட்டுத்திறன் மடிப்புகள் தாய்மொழியின் ஊடாட்டத்தில் நெய்யப்படுகின்றன. ஆகவே தான், வளர்ந்த பிறகு எத்தனை மொழிகள் கற்றாலும் எந்தச் சிந்தனையும் முடிவில் அவனுக்குத் தாய்மொழியிலேயே உள்ளே எழுகிறது. பின்னர் இன்னொரு மொழியாக மாற்றம் பெற்று வெளியே வருகிறது. சிந்திக்கிற மொழியிலேயே பேசவும், எழுதவும், வேறு வகையாக வெளிப்படுத்தவும் செய்வது இயற்கையானது, இயல்பானது, எளிதானது. அந்த பொருளில் தான்.தாய்மொழி தாய்ப்பால் என்றால், பிறமொழி புட்டிப்பால் என்-கிறோம். தாய்மொழி கண்கள் என்றால், பிறமொழி கண்-ஆடிகல் என்கிறோம்.அந்த பொருளில்தான் தமிழ் நமது ஊனோடும், உதிரத்தோடும், உயிரோடும் கலந்தது என்-கிறோம்.தமிழை வளர்க்கத் தவறிய தமிழன் எதிர்காலத்தில் நாதியற்றுப் போவான்."



------ தமிழ்-நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை-ஞர்கள் சங்கம்




தமிழை, தமிழ்-இன மக்களை பாதுகாப்பதைப் போல (வெறும் அரசியல் ஆதாயதிற்காக) நடிக்கும் ஒரு சில தலைவர்களை உலகறியும். தகவல்தொழில்-நுட்பத்'துறையில் இந்தியா அபார வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், உலகின் அதிவேக கணிணி தர வரிசை பட்டியலில் நம்மால் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை. நாம் ஆராய்ச்சியில் பின் தங்கி உள்ளோம் என்பதற்கு இன்னும் ஏராளமான சான்றுகளை சொல்லிக் கொண்டே போகலாம். தாய்மொழி வழி கல்வியின் பலன்-களை சரியாக உணர்ந்தால், இன்னும் எராளமான அப்துல்-கலாம்'ஐ இங்கே உருவாக்கலாம். மொழி அழியும் பொழுது, அது சார்ந்த பண்பாடு,கலாச்சாரம்.., இன்னும் பல.., அம்மொழியுடன் மறைமுகமாக அழியும் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.


இன்றைய கால சூழ்-நிலையில் நாம் மற்ற மொழிகளை கற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பது உண்மையே. மற்ற மொழிகளை கற்பதில் தவறில்லை.தாய்மொழின் முக்கியதுவத்தை மறந்துவிடக் கூடாது...




Past Histories: Tamil Interface for windows 95/2000,Zha-Linux by Tamil-Nadu Government’s Tamil Virtual University, Linux based Bharat Operating Sytem by Indian government, Tamil interface for Windows by Microsoft Corporation etc.,by spending Lakhs and Lakhs of Rupees all of those resulted in failures due to various reasons like Outdated versions, Less User-Friendly, Not-suited for unregistered Operating System etc.



LAUNCHING..... VIRTUAL TAMIL OPERATING SYSTEM -Trial Version Release


Targets 7 Crore Tamil people, which makes the computer system to be part of, each and every Tamilian’s day-today life. Being Language should not be barrier for Tamil users to access the world’s most innovative system-computer , Here from start up to shut down, “Everything in Tamil ” (Except file & Folder names), With our own Tamil desktop & Start Menu, lot of inbuilt Tamil & other softwares, games, Browser, Antivirus etc., in International standard.




FEATURES:

• From start up to shutting down,desktop to Softwares, “Everything in Tamil”

• Inbuilt Tamil & other softwares, Games, Antivirus, Browser, offline Google etc.,

• Advanced GUI, more interactive & interesting forms & buttons than windows.

• 3D animated visual effects & DTS audio effects.

• More than 3GB of softwares, just in 100MB set-up All-in-1.



Note:Virtual Tamil Operating System- as software,it runs On Windows, changes our system as Tamil O.S Environment in look. Allows us to change wall-paper,screen-saver,paste files as in windows desktop



INBUILT SOFTWARES IN TAMIL:


1. Kural:1330 Kural,Audio,English translation,Tamil-English meaning,search, Print

2. Paadagan: - WinAmp

3. Agaraathi: English-Tamil dictionary with 1000’s of words, Pal’s dictionary

4. Kuripaedu: Tamil Notepad

5. Padam-edu: Screen Capture

6. BoothaKannaadi: zoom’s system.

7. Pootu: Folder lock

8. Kanipaan: Graphical Scientific Calci.

9. Valai-Pakkam vuruvaakki: FrontPage,to design web page.

10. En kanini: My computer

11. VuruMaatru: Encrypt & decrpypt text, doc files

12. Tamil Google: Valuable Articles, History of various fields, for Offline Access

13. Mozhi-paeyarppu: Type in English, get in Tamil- Transliteration

14. PDF padi: Acrobat Reader.

15. PDF Aakki: Document To PDF converter

16. Pada-Anghaadi: Image Editor

17. Kanini-Vivaram: Finds 1000’s of Hardware info & Control’s Programs.

18. Vilaiyaatugal: Lot of Interesting small Games for Tamil Kutties

19. Zip-Idu: Zip/unzip files, WinRAR.

20. Sutham saei: Cleans system’s unwanted temporary files, registries.

21. Voli-Vozhi: Graphical Audio-Video player-VLC player

22. You-Tube Irakki: You-Tube Downloader

23. Kirumi-Neeki: Delete virus,worm,trojan,spy.

24. Maeyloadi: Tamil Web browser.

25. Mudhal Vuthavi: Object Dock, Windows Tools in Graphical Manner

26. Google Tamilagam: - 3D Maps-Google Earth for Tamil-Nadu

27. Valai-Cam: - Similar to Cyberlink YouCam-webcamera access

28. Kurunthattu-Eluthi: - Burn CD\DVD\Blu-Ray Disc-Nero

29. Paaduvaan: - Windows Media Player

30. Vadivam: - CAD Design 2D/3D Engineering Graphics

31. Padampaar: - Image viewer with Advanced options

32. Padipaan: - Reads Document

33. Irakki: - Downloader to download files

34. Uduruvi: - Blue-Tooth Manager

35. Bible: - Complete Tamil Bible as Software

36. Selvam: -For Simple accounts maintainence-Expense management System

37. Tamil E-learn: - Picturized Soft-Book to learn Tamil

38. Mugavari: Contact Maintainance System

39. Kanini Maruthuvar: System Health checker.

40. Soll Vangi: Lakhs of Technical English-Tamil Translation words

41. Noolagam:250 Tamil Literature works-pathupaattu,Pathinenkeelkanaku etc

42. Voli Maatru: All-Type Audio/video converter

43. BMI Maathipidu: Simple personal Health analysis tool

44. U.S. Vaaliban: Picturized Soft-book to learn basics of 6 Indian languages

45. E-kolangal: More than 100 kolam’s to learn under various categories …

………..More & More coming soon………… Upcoming Works-Planned to do- Waiting List:

46. EN-kanitham: Numerology based on name, d.o.b, zodiac sign etc.,

47. Cyber-Kili: Modern kili-Josiyam- funny interactive astrology predictions

48. E-vaelaan: Agri s/w for crop protections-threats,symptoms,solutions.

49. Kutties: Traditional & Modern Tamil baby names based on start letters

50. Porutham: Marriage match check- based on Sunsign & BloodGroup



BENEFITS: Helpful to most Tamil people of rural areas to access computer system in their own mother language, as most common softwares are in Tamil itself…i.e.,it improves no. of users. Makes Tamilians to get stick to our Tamil language itself, instead of migrating to English. Tamil Literature Book Collections altogether under 1 roof, helpful for Tamil Scholars to Research on Tamil works. Selvam, Soll-vangi, Mozhi-paeyarppu etc., useful for Small scale industries, Students, Tamil Writers, Reporters, Tamil media..and so on.



SPECIALITY: Modern attractive different-shaped Forms/Buttons… etc., Its Desingned in a Way that it can work in any Platform, and Upgraded in Future. But Existing Systems- Tamil Interface for Windows (Developed under Tamil Virtual university’s Tamil Software Development Fund) are designed only for Particular O.S/platform.



Thanks to all the supporters.


We are launching Trial version of Virtual Tamil O.S by next year. We are offering it as Freeware.

Interested persons can register by mailing to us.







--------------------------------------


Use this link to get info:
https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0B8nQ6EuJfsiIMTNkYzlmOTktZWVkOS00MWRlLThjODktOTcxYWRjZmRlZGRj&hl=en_US






------------------------------------


---------------------------------

For Video demo:

http://www.youtube.com/watch?v=GgbyIzNhI2I


----------------------------






-------------------------------------------------------------------------


As most prefered to view "Virtual Tamil Operating System Trail Version Trail" - VIDEO online itself,
its uploaded in youtube.com videos.
Interested persons just view it online as per suggestions.
Steps:
Browser-> google.com -> type "Tamil operating System" click search -> Click videos option in left side (it shows d video search results).
-> select second video titled "Virtual Tamil Operating System"

Just click to open it -> View it online (Download if u wish).





---------------------------------------------------------











Feel free to post your comments/Sugggestions.



Our other Works, Coming Soon....:

English-to-Tamil Dictionary for Android Devices

Cloud Based Virtual Tamil Operating System



Vizhithidu Tamizha...!



Ofcourse we are starting up an group named “Vizhithidu Tamizha...!”, to make students aware of Tamil Computing, GreenIT, Importance of Voting, Tamil Eelam,Scope of Higher education etc.,


Interested persons can Join hands with us.....



By, SARAN SOLUTIONS TEAM, Erode

http://www.saransolutions.hpage.com/ (sample website under construction)


Dedicated to brothers & sisters of Tamil Eelam

அதிர்வுகள் தொடரும்....!